4/12/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 210
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

✍️  டிசம்பர்- 4
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5890
22 K தங்கம்/ g. : ₹ 7130
 வெள்ளி    /g   : ₹ 100.00

✍️ *வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*

தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

✍️ *திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்: 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்*

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

✍️ *தென் மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயக்கம்*

புயல்மழை காரணமாக, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டன.

✍️ *தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா-விஜய்*

ஒவ்வொரு ஆண்டும் புயல் மற்றும் பேரிடரின் போது, பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை, ஆட்சியாளர்கள் சந்தித்து போட்டோ எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா.

அந்த நேரத்துக்கான, தீர்வை தந்துவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து, அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம் என விஜய் கூறினார்.

இதனிடையே, சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, 300 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்டவற்றை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விஜய் வழங்கினார்.

✍️ *அரசியலாக்க விரும்பவில்லை*

அரசியல் செய்வதற்காகவே சிலர், வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளனர். என் மீதும், அதிகாரிகள் சட்டையிலும் பட்டது. யார் அதனை செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நபர் எந்த கட்சியை சேர்ந்தவர்; சில மாதங்களுக்கு முன் அவரது கட்சி நிர்வாகிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையும் பலருக்கும் தெரியும்.

சேறு அடித்தவர்கள் குறித்து கவலையில்லை. இதை வைத்து அரசியலாக்க அவர்கள் விரும்பினர். ஆனால், நாங்கள் அதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு பொன்முடி கூறினார்.

✍️ *தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் தான் மும்முரம்*

முதல்வரும், துணை முதல்வரும் சென்னையில் உள்ள தெருக்களில் புகைப்படம் எடுப்பதிலும், அதை சமூக வலைதளங்களில் பரப்பி பெருமைபட்டுக் கொள்வதிலும் தான் மும்முரமாக இருந்தனர். அதேசமயம், சென்னையில் மழை குறைந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கவில்லை. என அண்ணாமலை கூறியுள்ளார்.

✍️ *தலா ரூ.1 லட்சம் நிதியுதவி பன்னீர்செல்வம் அறிவிப்பு*

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

✍️ *ரேஷன் வாங்க ரேகை பதிவு கட்டாயமல்ல*

'பெஞ்சல்' புயலால், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், 'கார்டு ஸ்கேன்' செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது

✍️ *புயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் விசாரித்த பிரதமர்*

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும், பிரதமரிடம் தெரிவித்தேன்.

மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள, புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கடிதம் எழுதி இருப்பதை தெரிவித்து, அதை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என, உறுதிபட நம்புகிறேன்.

✍️ *மிளகாய் மூட்டைகளில் ரூ.4.25 கோடி கஞ்சா கடத்திய மூன்று பேர் சிக்கினர்*

ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னரில் மிளகாய் மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட, 4.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 848 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

✍️ *40 அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை வார்டு வசதி*

'வசதி படைத்தவர்கள் சிகிச்சை பெற, 40 அரசு மருத்துவமனைகளில், கட்டண படுக்கை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

✍️ *புதிய படங்களை விமர்சிக்க கட்டுப்பாடு*

'சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு செய்தால், போலீசில் புகார் அளிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

✍️ *வானிலை ஆய்வாளர்களை திணறடித்த 'பெஞ்சல்' புயல் போக்கு காட்டியதால் கணிக்க தவறியதாக தகவல்*

எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை உருவான, 'பெஞ்சல்' புயலின் போக்கு குறித்து, துல்லியமாககணிக்க முடியாத நிலை ஏற் பட்டதாக, வானிலை ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.

✍️ *பாக்கெட்டில் 5 கிலோ அரிசி*

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு, 5 கிலோ பாக்கெட்டில் இலவச அரிசி வழங்குகிறது.

✍️ *இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்*

தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், 'புரோபா - 3' என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வுசெய்ய உள்ளன. மொத்தம், 550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

✍️ *பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்*

கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாள் என்பதால், நாளை, பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

✍️ '*சாத்தனுார் அணையை திறக்காமல் இருந்திருந்தால் ஆறாத துயரமாக நிலைமை மாறியிருக்கும்'*

'சாத்தனுார் அணையில் இருந்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வினாடிக்கு, 1.80 லட்சம் கனஅடி நீரை திறந்து விடாமல் இருந்திருந்தால், பாதிப்புகள் கணக்கில் அடங்காமல் போயிருக்கும்; ஆறாத துயரமாக அது மாறியிருக்கும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

✍️ *முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததால் பாதிப்பு: பழனிசாமி*

சாத்தனுார் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் போதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். டிசம்பர், 2ம் தேதி அதிகாலை, 2:30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அணையிலிருந்து வினாடிக்கு, 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, தி.மு.க., அரசு உயர்த்த வேண்டும். கால்நடைகள், வாகனங்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்களை கணக்கிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

✍️ *திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?*

திருவண்ணாமலையில் சில இடங்களில், கனமழையால் மேற்பரப்பு மண் அடுக்குகள் குழைந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக, பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

✍️ *யார் சொல்வதை கேட்பீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி*

முதல்வர் ஸ்டாலின் யாரை மதிக்கிறார்? அதானி எதற்காக வந்தார் எனக்கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் தமிழகத்திற்கு வந்தார். யாரை பார்க்க வந்தார்? எதற்காக வந்தார்? யாரை, எங்கு சந்தித்தார்? இதை ராமதாஸ் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டீர்கள். என்னை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டீர்கள். அதனால் நான் கேட்டால் சொல்ல மாட்டீர்கள். ராமதாஸ் பெரிய தலைவர். அவருக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். 73 இடம் வென்ற தலைவர் (பழனிசாமி) ஆள் இல்லை என்றால், யார் சொல்வதை கேட்பீர்கள்? யார் கருத்தை மதிப்பீர்கள்?என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

✍️ *அரசு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காதீங்க * பழனிசாமிக்கு சேகர்பாபு கண்டனம்*

'வாய் சவடால் பேசும் பழனிசாமி, அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தாலே போதும்,'' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

✍️ *6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்! தினமும் ரூ.175 கோடி வட்டி! அன்புமணி புகார்*

கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 700 கோடியே 81 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதுவரை வாங்கிய கடனுக்காக, தினமும் 175 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதாரப் பேரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே வழி. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் அதை செய்து முடிப்பர். என அன்புமணி கூறியுள்ளார்.

✍️ *வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்: செல்போன் அழைப்பால் டிரைவர் தப்பினார்*

பெரம்பூர்: பெரம்பூர் லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஷகீல் (34), ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவிக நகர் தீட்டி தோட்டம் 7வது தெரு பகுதிக்கு சவாரி வந்துள்ளார். அப்போது பாபு (60) என்பவர் வீட்டின் முன்பு ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்கு வந்த நபரை இறக்கி விட்டு விட்டார். அப்போது, அவரது செல்போனில் அழைப்பு வந்ததால், ஆட்டோவில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்த இடத்தின் மேலே இருந்த பாபு என்பவர் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் ஆட்டோ முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. பலத்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

✍️ *உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக இருந்ததால் அண்ணன் பெயரை பயன்படுத்தி காதலித்து திருமணம், போலீசை ஏமாற்றிய தம்பி கைது: சினிமா பாணியில் 20 ஆண்டுகளாக சகோதரனாகவே சுற்றியதும் அம்பலம்*

சென்னை: உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயர் மற்றும் அவரது சான்றிதழ்களை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சினிமா பாணியில் காதல் மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமாற்றி வந்த தம்பியை போலீசார் பொறிவைத்து கைது செய்தனர்.

✍️ *மணமகன் தன்னுடன் குடித்தனம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக சர்ச்சில் நடந்த திருமணத்தை நிறுத்தும்படி பெண் தகராறு*

வண்ணாரப்பேட்டை சர்ச்சில் நடந்த திருமணத்தை திடீரென வந்த இளம்பெண் நிறுத்தும்படி தகராறு செய்தார். மாப்பிள்ளையுடன் ஏற்கனவே, திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துவதாக அவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

✍️ *புயல் நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்*

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே, மத்திய உள்துறை அமைச்சர், மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்றார்

பேனாமுள் பத்திரிகை செய்திகள் 

*பாடி பா.கரா்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments