20/12/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
✍️🇮🇳🙏✍️🇮🇳🙏✍️🙏🇮🇳✍️🙏🇮🇳🙏✍️🙏🇮🇳🙏✍️
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
தேதி : 20/12/2024
வாட்சாப்: 9381157520
ஆசிரியர்-பாடி பா.கார்த்திக்
 🇮🇳🙏✍️🇮🇳🙏✍️🇮🇳🙏✍️🇮🇳🙏✍️🇮🇳🙏✍️🇮🇳🙏✍️

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

✍️ டிசம்பர்- 20
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 23951.70
பேங்க் நிப்டி : 51575.70
சென்செக்ஸ் : 79218.05

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5840
22 K தங்கம்/ g. : ₹ 7070
 வெள்ளி    /g   : ₹ 99.00

✍️ *நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்; பாஜ – காங். எம்.பிக்கள் கைகலப்பு: கார்கே, ராகுலை தள்ளிவிட்டதாக புகார், 2 பாஜ எம்.பி.க்கள் காயம், ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு*

நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை கண்டித்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து, அவைக்குள் காங்கிரஸ் எம்.பிக்கள் நுழைய முயன்றபோது, பாஜ எம்.பி.க்கள் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இரு கட்சி எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பாஜ எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் தாங்கள் காயமடைந்ததாக கூறி பாஜ எம்பிக்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

✍️ '*பைக் டாக்சி'க்கு தடை கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி*

சென்னை:ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்; 'பைக் டாக்சி'களுக்கு தடை விதிக்க வேண்டும்; ஆட்டோ பயணியருக்காக புதிய செயலி துவங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச்சாலையில் இருந்து கோட்டையை நோக்கி, ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணியாக புறப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

✍️ *தமிழகத்தில் வரும் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு*

தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

✍️ *திருப்பதியில் மார்ச் மாத சேவைக்கு முன்பதிவு*

திருமலை, திருப்பதி வெங்க டேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில், வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

✍️ *பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு*

பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

✍️ *போக்குவரத்து ஓய்வூதியர்கள் சென்னையில் தர்ணா போராட்டம்*

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

✍️ *வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு ஒரு டாலர் ரூ.85ஐ தாண்டியது*

இதுவரை இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு டாலர், 85.13 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

✍️ *திருச்சியில் நுாலகம் கட்ட ரூ.290 கோடி*

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பெரிய நுாலகம் மற்றும் கருணாநிதி அறிவுசார் மையம் கட்ட, 290 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

✍️ *மெத்ஆம்பெட்டமைனை திருடி விற்றோம் கைதான போலீஸ்காரர் வாக்குமூலம்*

சென்னை:கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்த மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருளை திருடி, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக போலீஸ்காரர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

✍️ *கும்பமேளா ரயில்களில் இலவச பயணம் இல்லை*

மகா கும்பமேளாவுக்கு ரயில்களில் இலவசம் இல்லை; டிக்கெட் இல்லாமல் பயணித்தால், அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

✍️ *சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த படம்- அமரன்: நடிகை சாய்பல்லவி*

சென்னை: 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.

✍️ *மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி உடைந்து விழுந்தது 2 தொழிலாளர் பலி: 5 பேர் படுகாயம்*

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி 50 அடி உயரத்திலிருந்து உடைந்து விழுந்ததில், நிலக்கரி குவியலில் சிக்கி 2 ஊழியர்கள் பலியாகினர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

✍️ *மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என கூறுவது தவறு: விஜய் மீது சீமான் கடும் தாக்கு*

மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என விஜய் கூறியது தவறு என சீமான் தெரிவித்தார்.

✍️ *14 மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்*

நீதிபதி ரபீக், 14 மீனவர்களுக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.7 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.2 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து 14 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

✍️ *தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை*

தமிழகத்தில் புதிதாக துவங்கியுள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர் நேரடி சேர்க்கை வருகிற 31ம் தேதி வரை நடைபெறுகிறது.


✍️ *சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு*

வழக்கறிஞர் காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், திருவேற்காடு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த திருவேற்காடு நகராட்சி, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.சுதிர்குமார் அமர்வு, தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

✍️ *விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்*

விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்களுக்கு இனிமேல் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✍️ *ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை : ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை*

ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

✍️ *ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு*

ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

✍️ *8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆணை*

சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை மாதம் ரூ.3,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

✍️ *மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்த கணவர்: கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு*

கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க ரூ.80 ஆயிரம் பணத்தை நாணயங்களாக மூட்டையில் கட்டி கொண்டு வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

✍️ *ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு*

ராமேஸ்வரம்: ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✍️ *பணியில் இருந்து நீக்கியதாக கூறி பிரபல வங்கியில் புகுந்து மேலாளருக்கு சரமாரி வெட்டு: மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்*

தி.நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் புகுந்து மேலாளரை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோட முயன்ற அவரை போக்குவரத்து காவலர் மடக்கி பிடித்தார்.

✍️ *மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயான பூமிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேயர் ஆலோசனை*

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயானபூமிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

✍️ *பிரதமர் மோடியுடன் உரையாட ஜன.14 வரை முன்பதிவு*

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜன.14 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


✍️ *ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை*

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

✍️ *ரூ.6203 கோடி கடன் பாக்கிக்கு ரூ.14,131 கோடி வசூல்: தொழிலதிபர் விஜய் மல்லையா புலம்பல்*

எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா பதிவிடுகையில், கடன் மீட்பு தீர்ப்பாயம் கிங்பிஷர் ஏர்லைன்சின் கடன் ரூ. 1200 கோடி என்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 6203 கோடி என்று தீர்ப்பளித்தது. ரூ. 6203 கோடி கடனுக்கு என்னிடம் இருந்து ரூ.14,131.6 கோடியை வசூலித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

✍️ *கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு*

கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 23 பேரின் நீதிமன்ற காவல், வரும் ஜனவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

✍️ *சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்: அஸ்வின் பேட்டி*

சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்” என சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டியளித்தார்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments