🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 224
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
✍️ டிசம்பர்- 18
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24336.00
பேங்க் நிப்டி : 52834.80
சென்செக்ஸ் : 80684.45
பதிவு
18/12/2024
🙏நன்றி🙏நன்றி🙏நன்றி🙏
*உடனடியாக நடவடிக்கை எடுத்து EB சிமெண்ட் போஸ்டரை மாற்றி கொடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி*
சென்னை அம்பத்தூர், பாடி,88வது வார்ட், M.G ரோட்,குமரன்நகர் எண்- 163/37 (மஹாலக்ஷ்மி எலக்ட்ரிக்கல்ஸ்) என்ற விலாசம் அருகே உள்ள மின்ஒயர்களை தாங்கி நிற்கும் சிமெண்ட் போஸ்டர் சேதமடைந்து இருப்பதால் மாற்ற வேண்டும் என்று பேனாமுள் பத்திரிகை மூலமாக செய்தி அனுப்பியிருந்தோம் அந்த செய்தியை அறிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமெண்ட் போஸ்டரை மாற்றி கொடுத்த பாடி மின்வாரிய அதிகாரிகளுக்கும், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
✍️ *மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு*
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவை தாக்கல் செய்வதற்காக அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 3ல் 2 பங்கு பலம் கிடைக்காததால் ஆளும்தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மசோதா மீது விசாரணை நடத்த, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது
✍️ *தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
✍️ *போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்*
போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மண்டல தலைமை அலுவலகம் முன்பு நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஏஐடியுசி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
✍️ *வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்: 19ம் தேதி அல்லது 20ம் தேதி மழைக்கு வாய்ப்பு*
வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இது படிப்படியாக 19 அல்லது 20ம் தேதி நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
✍️ *ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு*
ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். புதிய கட்டண விபரத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும்' என தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
✍️ *தி.மு.க., செயற்குழு டிச.22 கூடுகிறது*
தி.மு.க., தலைமை செயற்குழுக் கூட்டம், டிச. 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *ரூ.14.2 கோடி கோகைன் போதைப்பொருள் வயிற்றில் மறைத்து கடத்திய பெண் கைது*
சென்னை:வயிற்றுக்குள் மறைத்து, 14.2 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் கடத்திய பெண் பயணியை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
✍️ *விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது*
சவுக்கு சங்கர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் வாயிலாக மனு அளித்தார்.மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி செங்மலச் செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும், 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை தேனாம்பேட்டை போலீசார் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், சவுக்கு சங்கரை கைது செய்தனர். தேனி மாவட்ட போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என, சென்னை போலீசார் தெரிவித்தனர்.
✍️ *108 ஆம்புலன்ஸ்' இருப்பிடம் அறிய 'மேப்' இணைப்புடன் புதிய வசதி*
சென்னை:தமிழகத்தில், '108 ஆம்புலன்ஸ்' சேவை, பயனாளிக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன், வாகன இருப்பிடத்தை அறியும் வகையில், வரைபட இணைப்புடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
✍️ *செயலி வழி கடன் 4,900 பேருக்கு ரூ.60 கோடி*
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், 'ஆன்லைன்' வழியாக பெற, 'kooturavu' என்ற மொபைல் போன் செயலி, இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் அறிமுகமானது.
இதுவரை செயலி வாயிலாக, 5,034 பேர் கடனுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அதில், 4,900 பேருக்கு, 60 கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
✍️ *பாதிப்புடைய கர்ப்பிணியர் விபரம் 'பிக்மி' தளத்தில் பதிய அரசு உத்தரவு*
உடல்நல பாதிப்பு அச்சுறுத்தல் உள்ள கர்ப்பிணியர் விபரங்களை, 'பிக்மி' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
✍️ *மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டம் கண்காணிப்பு அதிகாரி திடீர் மாற்றம்*
பருவமழை முடிந்ததும், மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், அவற்றை கண்காணிக்கும் பொறுப்பை, வேறு அதிகாரிக்கு மாற்றி நீர்வளத்துறை உத்தரவிட்டு உள்ளது.
✍️ *அரசு டாக்டர் மீது ஏன் வழக்கு இல்லை? போலீசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி*
சென்னை:'அரசு மருத்துவமனை டாக்டரை கத்தியால் குத்தியதாக, வாலிபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனரா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.
✍️ *ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை*
தமிழக அரசு 2025ல், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உட்பட, 24 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
2025ல், ரேஷன் கடைகளுக்கு, 11 நாட்கள் மட்டும் விடுமுறை அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
✍️ *அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் புகுந்து சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய தெரு நாய்*
பரமக்குடி : பள்ளிக்குள் புகுந்து சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *இன்று கோவை செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி*
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.
✍️ *21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்: எம்டிசி நிர்வாகம் தகவல்*
சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
✍️ *தாம்பரம் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் 4 குடிநீர் லாரிகள்: மேயர் தொடங்கி வைத்தார்*
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1.10 கோடியில் தலா 9000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் புதிதாக வாங்கப்பட்டது. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பங்கேற்று, கொடியசைத்து தண்ணீர் லாரிகளை தொடங்கி வைத்தார்.
✍️ *புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்*
புழல் ஏரியிலிருந்து கடந்த 4 நாட்களாக 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், புழல் ஏரிக்கு 150 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முற்றிலுமாக குறைந்தது.இதனால், கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் 1000 கன அடியில் இருந்து தற்போது 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
✍️ *கொடுங்கையூர், அயனாவரம், ஓட்டேரியில் 7 கஞ்சா வியாபாரிகள் கைது*
கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 64வது தெருவை சேர்ந்த முகமது அலி (எ) பாபு என்பவரும் அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்த உதயவாணியையும்
ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலம் அருகே அவ்வழியாக வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கத்தி இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
✍️ *இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்*
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், நேற்று முன்தினம் இரவு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர்.
✍️ *அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி: ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு*
சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
✍️ *ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்*
சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கும் போதும், எக்ஸ்ரே எடுக்கும் போதும் பணத்தை செலுத்தி சேவை பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
✍️ *ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்*
ஈரோட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நலப்பணிகளை கள ஆய்வு செய்கிறார்.
✍️ *திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை ஏறிய ஆந்திர பெண் 3 நாட்களாக சிக்கித் தவிப்பு: வனக்காப்பாளர் முதுகில் சுமந்து வந்து காப்பாற்றினார்*
திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலையேறி 3 நாட்களாக கீழே இறங்க முடியாமல் தவித்த ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்துவந்து பாதுகாப்பாக மீட்டார்.
✍️ *பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு ஜன.1 முதல் அமல்*
கலசப்பாக்கம்: பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது.
✍️ *நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து*
நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.
✍️ *கலைகளில் சாதித்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு ஒதுக்கீடு*
தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனையருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பளிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
✍️ *நாக்கை பிளந்து 'டாட்டூ' மருத்துவ குழு விசாரணை*
திருச்சியில் நாக்கை பிளந்து, 'டாட்டூ' வரைந்த விவகாரத்தில், மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, மருத்துவ ஊரக நல பணிகள் துறை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
✍️ *விவசாயிகளுக்கு கவச உடை: மத்திய அரசு அறிமுகம்*
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
✍️ *நீட்' தேர்வு முறையில் வருகிறது மாற்றம்: விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு*
இளநிலை, 'நீட்' நுழைவுத் தேர்வை பேனா - பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது, 'ஆன்லைன்' தேர்வாக நடத்துவதா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதாரத்துறையும் ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
✍️ *வேலூரில் பிரசவத்தின்போது சென்னை காவலரின் மனைவி, குழந்தை பலி: டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்*
வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி, குழந்தை இறந்தனர்.
✍️ *பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பில் 4வது ரயில் முனையம்: தெற்கு ரயில்வே அனுமதி*
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*