14/12/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 220
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

✍️ டிசம்பர்- 14
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24768.30
பேங்க் நிப்டி : 53583.80
சென்செக்ஸ் : 82133.12

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5970
22 K தங்கம்/ g. : ₹ 7230
 வெள்ளி    /g   : ₹ 101.00

✍️ சென்னை,பாடி, M G ரோட் தேவர்நகர் 
ரோடு போடும் வேலை நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது என்றும் மிக சீக்கரம் முடித்து கொடுக்க வேண்டும் என்று பெருநகர மாநகராட்சி மண்டலம் -7  அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

✍️ *திருவண்ணாமலையில் அரோகரா முழக்கம் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்: 30 லட்சம் பக்தர்கள் திரண்டனர்*

மலையே மகேசனாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த மகாதீபத்தை சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

✍️ *சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன்: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்*

சென்னை: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 75 கோடி ரூபாய் கடன் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

✍️ *குகேஷுக்கு ரூ.5 கோடி: ஸ்டாலின் அறிவிப்பு*

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, 5 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

✍️ *மார்கழி இசை விழா துவக்கம் 
ரஞ்சனி - காயத்ரிக்கு விருது*

தி.நகர், கிருஷ்ண கான சபாவில் 68வது மார்கழி விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. இதை 'அப்பல்லோ' மருத்துவமனை குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கர்நாடக இசை உலகின் இரட்டையர்களான ரஞ்சனி -- காயத்ரி சகோதரியருக்கு, 'சங்கீத சூடாமணி' விருதும், பரதநாட்டிய கலைஞர் கீதாசந்திரனுக்கு 'நிருத்யா சூடாமணி' விருதையும் வழங்கி கவுரவித்தார்.

✍️ *வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு 16ல் மீண்டும் துவங்குகிறது கனமழை*

வங்கக்கடலில், நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில், 16 முதல் மீண்டும் கனமழை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

✍️ *பொங்கல் மளிகை தொகுப்பு 3 வகைகளில் விற்பனை*

இனிப்பு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில், 199 ரூபாய்க்கும்; 'சிறப்பு பொங்கல்' என்ற பெயரில், 499 ரூபாய்க்கும்; 'பெரும் பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில், 999 ரூபாய்க்கும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்க, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

✍️ *பொங்கல் பரிசு ரூ.1,000 உண்டு*

ஜனவரி, 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

✍️ *ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது; ஸ்டாலின்*

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, மக்களாட்சிக்கு விரோதமானது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

✍️ *அரிட்டாப்பட்டி ஆர்பாட்டத்தில் பொங்கிய சீமான்*

'மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் இருப்பது குறித்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்ததே தி.மு.க.,வினர் தான்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

✍️ *குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு*

குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

✍️ *விதிமீறல் என்றால் நிச்சயம் நடவடிக்கை! திண்டுக்கல் சம்பவத்தில் அமைச்சர் உறுதி*

திண்டுக்கல்லில் 7 பேர் உயிரிழப்புக்கு காரணமாக தனியார் மருத்துவமனை ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

✍️ *மழையால் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுங்கள்! தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்*

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள், நிவாரண தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

✍️ '*டைப் 1' நீரிழிவு நோயால் பாதிப்பு 2,500 குழந்தைகளுக்கு 'இன்சுலின்' சிகிச்சை*

தமிழகத்தில், 'டைப் 1' நீரிழிவால் பாதிக்கப்பட்ட, 2,500 குழந்தைகளுக்கு, 'இன்சுலின்' ஊசி செலுத்தப்பட்டு வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

✍️ *சிதம்பரத்தில் பலத்த மழை:நடராஜர் கோவில் கோபுரத்தில் 3 சிலைகள் சேதம்*

உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவிலின் மேற்கு கோபுரத்தில் 2-ம் அடுக்கில் இருந்த 2 துவாரக பாலகர் சிலைகளும், மற்றொரு சிலையில் உள்ள இடது கால் பகுதியும் இடிந்து விழுந்தன.

✍️ *செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு*

ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால் முதற்கட்டமாக நேற்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதற்காக அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், உபரிநீர் கூடுதலாக திறக்க முடிவு செய்த அதிகாரிகள், மூன்று மதகுகள் வழியாக 4500 கன அடி உபரி நீரை வெளியேற்றினர்.

✍️ '*கொரோனா குமார்' திரைப்பட விவகாரம் சிம்புவிடம் ரூ.1 கோடி வழங்க உத்தரவு*

கொரோனா குமார் திரைப்படம் தொடர்பாக, வேல்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும், நடிகர் சிம்புவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததால், நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை, நடிகர் சிம்புவிடம் திருப்பி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

✍️ *அயப்பாக்கம் பிரதான சாலையில் 7 கடைகளில் கொள்ளை*

அயப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள பிரபல மூக்கு கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார். ஆனால், முடியாததால் திரும்பி சென்றார். அதே சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் ரூ.30,000 மற்றும் செல்போன் திருடு போனது.இதே சாலையில், யூடியூபர்களான டி.டி.எப்.வாசன் மற்றும் அஜீஸ் ஆகியோர், பைக் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். இவரது கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த ரூ.20,000, மூன்று உயர் ரக ஹெல்மேட் ஆகியவற்றை திருடி சென்றனர்.பின்னர், அருகில் உள்ள காலணி கடை பூட்டை உடைத்து, ரூ.20,000, ரெயின் கோர்ட், பை, உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.30,000 மற்றும் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.4000 திருடியுள்ளனர். மேலும், பழச்சாறு கடை, மெத்தை கடை, ஓட்டுனர் பயிற்சி பள்ளி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

✍️ *டெல்லியில் தலைமை செயலாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்*

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தலைமைச் செயலர்களின் 4வது தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது.

2 நாள் நடக்கும் இந்த மாநாடு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

✍️ *அரசியல் சாசனத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது: மக்களவையில் பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு*

தனியார் மயம் காரணமாக வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை மாற்றும் முயற்சியில் ஆளும் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறதென பிரியங்கா கூறினார்.

✍️ *சினிமா தியேட்டரில் பெண் பலியான வழக்கு நடிகர் அல்லுஅர்ஜுன் திடீர் கைது: மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைப்பு, ஜாமீனில் விடுவித்தது ஐகோர்ட்*

சினிமா தியேட்டரில் பெண் பலியான வழக்கு தொடர்பாக நடிகர் அல்லுஅர்ஜூன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் கேட்டும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அல்லு அர்ஜூன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அல்லு அர்ஜூனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

✍️ *எப்போது வேண்டும் என்றாலும் பிஎப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகம்: அடுத்த ஆண்டு முதல் அமல்*

புதிதாக பிஎப் கட்டமைப்பை மாற்றி வருகிறது மத்திய அரசு. அதன் மூலம் பிஎப் பணத்தை வங்கி கணக்கு போன்று ஏடிஎம் மூலம் எப்போது வேண்டும் என்றாலும் எடுக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக தனிக்கார்டு வழங்கப்படும். இந்த கார்டு மூலம் எந்த ஏடிஎம்மிலும் இருந்தும் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம். ஆனால் பிஎப் கணக்கில் உள்ள பணத்தில் 50 சதவீதம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.இதற்கான முடிவு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

✍️ *விழுப்புரம், தேனி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை*

✍️ *நெல்லை, தென்காசி தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை*

✍️ *தாமிரபரணியில் பெருக்கெடுத்து பாயும் வெள்ளம்*

✍️ *கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு*

✍️ *தொடர் கனமழையால் தேனி முல்லைப்பெரியாற்றில் வெள்ளம்*

✍️ *தொழுதுார் அணைக்கட்டிலிருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றுவதால் வெள்ளாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது*

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள் 
பாடி பா.கார்த்திக்
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments