🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 05/11/2024
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
✍️ நவம்பர்- 07
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24484.05
பேங்க் நிப்டி : 52317.40
சென்செக்ஸ் : 80378.13
✍️ *திருச்செந்துார் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்*
இன்று நவ., 7 மாலை 4:30 மணியளவில் திருச்செந்துார் கோயில் முன்புள்ள கடற்கரையில் நடக்கிறது. அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
✍️ *தனக்கு பதிலாக ஒருவரை நியமித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'*
தர்மபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பாலாஜி, தனக்குப் பதில் வேறொருவரை நியமித்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
✍️ *11 மாவட்டங்களில் இன்று கனமழை*
வளி மண்டல சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✍️ *இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் - சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்*
இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் என சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
✍️ *அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி; டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்: 3.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி*
அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிபராக உள்ள டிரம்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
✍️ *முகூர்த்த தினங்களான நவ.7, 8-ம் தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு*
சுபமுகூர்த்த தினங்களாக நவ.7 மற்றும் நவ.8 ஆகிய நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்க பத்திரப்பதிவு துறைஅறிவுறுத்தியுள்ளது.
✍️ *நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை*
நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி படித்து கடந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை.இதனால் இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு வேறொரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஆனால் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க பணம் இல்லை என்று மணிகண்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
✍️ *திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் நாளை வெள்ளோட்டம்*
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ70 லட்சம் மதிப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இதன் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது.
✍️ *தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: டெல்லியில் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் அறிவுறுத்தல்*
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், வெள்ள காலங்களில் நீரை மொத்தமாக திறந்து விடக்கூடாது எனவும், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
✍️ *ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு என கூறி சென்னை தொழிலதிபர் மனைவியிடம் ரூ10.27 கோடி மோசடி செய்த 2 பேர் கைது*
சென்னை: ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக சென்னை தொழிலதிபர் மனைவியிடம் ரூ10.27 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
✍️ *தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்*
பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்; தமிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்; அடுத்தடுத்த ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு பூஜ்ய நிலையை அடையும். தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.
✍️ *தங்கம் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்தது*
நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கு விற்பனை செய்யப்பட்டது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*