🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 05/11/2024
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 181
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
✍️ நவம்பர்- 05
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 6075
22 K தங்கம்/ g. : ₹ 7370
வெள்ளி /g : ₹ 106.00
✍️ *மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த ஆவடி பருத்திப்பட்டு 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி*
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்ட் மாமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் அவர்களிடம் ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டியில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு இல்லாமல் இருந்து வந்த நிலையில் அந்த செய்தியை பேனாமுள் பத்திரிகை சார்பாக மாமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது
மனு கொடுத்தவுடன் மின்னல் வேகத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக 6 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டது மிக விரைவில் நடவடிக்கை எடுத்து அசத்தினார்
மற்ற தெருவிளக்குகளை மிக விரைவில் அந்தப் பகுதி முழுவதிலும் அமைத்து தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த மாமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் அவர்களை பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
✍️ *கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் கடும் மோதல் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை முடிவுகள் வெளியாக வாய்ப்பு*
வாஷிங்டன்: பெரும் எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில் அடுத்த அதிபர் கமலா ஹாரிசா அல்லது டொனால்டு டிரம்பா என்பதை அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
✍️ *செல்போன் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்*
நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு பஸ் 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சக்திவேல் ஓட்டிச்சென்றார்பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் சக்திவேல் செல்போனை பார்த்தபடி கவனக்குறைவாக பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.
இதை பயணி ஒருவர்,செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து டிரைவர் சக்திவேலை சஸ்பெண்ட் செயது அரசு போக்குவரத்து கழக நாகப்பட்டினம் மண்டல பொது மேலாளார் ராஜா, நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
✍️ *இரும்பு கட்டில் உடைந்ததில் தந்தை, மகன் சாவு*
சாணார்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிலில் நட்டு கழன்று இரும்பு சீட் கீழே இறங்கியதில் இருவரின் கழுத்தும் சீட்டுக்கு மேலே இருந்த கம்பிக்கு இடையில் சிக்கி கழுத்து நசுங்கி இறந்தது தெரிய வந்துள்ளது.
✍️ *தமிழ்நாடு முழுவதும் ரூ.6,000 கோடி மோசடி; நியோமேக்ஸ் நிறுவனம் மீது நவ.15 வரை புகார் தரலாம்: போலீசார் அறிவிப்பு*
மதுரை: நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணத்தை ஏமாந்தவர்கள் நவ.15 வரை புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவினர் கூறியுள்ளனர்.
✍️ *மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2,000 பேருக்கு அனுமதி*
மகா தீபத்தன்று மலையேற 2,000 பக்தர்களுக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பக்தர்களுக்கும் மகா தீப தரிசனத்திற்கு 11,500 பக்தர்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
✍️ *விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்களாக 234 பேரை நியமிக்க முடிவு: திருமாவளவன் தகவல்*
தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் அதிக புகார் உள்ளவர்கள், எல்லை பிரச்னைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்ளோம். புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
5 மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
✍️ *தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு நடிகை கஸ்தூரிக்கு பாஜ கண்டனம்*
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
✍️ *மேல்மருவத்தூர் அருகே அதிகாலை விபத்து பைக் மீது கார் மோதியதில் பெண் எஸ்ஐ, ஏட்டு பலி*
பைக் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த பெண் எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் பலியாகினர். கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
✍️ *பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்களுக்கு வாய்ப்பு முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு*
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
✍️ *சென்னை குன்றத்தூரில் ஆற்காடு பிரியாணி கடைக்கு சீல்*
சென்னை குன்றத்தூரில் உள்ள ஆற்காடு பிரியாணி கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ராஜேஷ் என்பவர் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததாக வந்த புகாரை அடுத்து, பிரியாணி கடையில் சோதனை நடத்தப்பட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
✍️ *தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது; திராவிடத்தில் தான் தமிழ்நாடு உள்ளது: பிரேமலதா பேட்டி*
மதுரை: தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது; திராவிடத்தில் தான் தமிழ்நாடு உள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமாலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் பிரேமலதா அளித்த பேட்டியில்; தமிழ் மொழியை காப்போம்; பிற மொழியை கற்போம் என்று தான் விஜய்காந்த் கூறியுள்ளார். சீமான் திடீரென அந்நியனாக மாறுவார்; திடீரென அம்பியாகவும் மாறுவார் என அவர் கூறினார்.
✍️ *2 மணி நேரம் UPI சேவை இயங்காது என HDFC வங்கி அறிவிப்பு*
நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
✍️ *சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நட தடை*
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
✍️ *கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்: சோதனை அடிப்படையில் நாளை முதல் ஒருவாரம் அமல்*
வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால கட்டுமான பணி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் நாளை முதல் சோதனை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
✍️ *ஆந்திராவில் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் சடலத்தை அடைத்து ரயிலில் கொண்டு வந்த தந்தை, மகள்*
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெண்ணை கொலை செய்து, சடலத்தை சூட்கேஸில் அடைத்து ரயிலில் கொண்டு வந்த தந்தை, மகள் கைது செய்யப்பட்டனர். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *வளிமண்டல சுழற்சியால் 8ம் தேதி முதல் கனமழை*
'தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வரும் 8ம் தேதி முதல் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
✍️ *மைதானத்தில் மின்னல் தாக்கி பெரு நாட்டு கால்பந்து வீரர் பலி*
லிமா: பெரு நாட்டில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் நடந்து சென்ற வீரர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
✍️ *ஊட்டிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை: ஒரு வாரத்தில் 'டெண்டர்'*
'அவிநாசி-மேட்டுப்பாளையம் வரையிலான, 35 கி.மீ., துார நான்கு வழிச்சாலை அமைக்க ஒரு வாரத்தில் 'டெண்டர்' விடப்படும்,'' என, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
✍️ *ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும்... ஒரே செயலி*
புதுடில்லி ரயில் டிக்கெட் முன்பதிவு, புறப்பாடு - வருகை, சேவை குறைபாடு குறித்த புகார்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை சீட்டு உட்பட ரயில்வே தொடர்பான அனைத்து தேவைகளுக்கும், 100 கோடி ரூபாய் செலவில் ஒரே செயலியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.
✍️ *பார்லிமென்ட் மைய மண்டபத்தில் 26ல் நடக்கிறது சிறப்பு கூட்டம்*
75வது ஆண்டையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டம் பழைய பார்லிமென்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மைய மண்டபத்தில் வரும் 26ல் நடைபெறவுள்ளது.
✍️ *கர்நாடகா கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்*
கர்நாடகாவில், 12 கோவில்களை தரிசனம் செய்யும் வகையில், தமிழகத்தில் இருந்து முதன் முறையாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து டிசம்பர், 5ம் தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரயில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக கர்நாடகா செல்லும்.
✍️ *தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகை; பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்*
கோவையில் இன்றும் (நவ., 5), நாளையும் (நவ., 6) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். பாதுகாப்பு பணியில், 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
✍️ *குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு*
ஆமூர்- - சிறுதாவூர் இடையே உள்ள தென்னந்தோப்பு பகுதியில், புதிய குழாய் பதிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. வேலை முடிந்த பின்பும், அந்த பள்ளத்தை மூடாமலேயே விட்டுவிட்டனர். தடுப்பும் அமைக்கப்படவில்லை.
ஆமூர் பகுதியை சேர்ந்த தேவராஜ்,மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் திருப்போரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளத்தில், மண் சறுக்கி நான்கு பேரும் பைக்குடன் விழுந்தனர்.
இதில், தேவராஜ் சுயநினைவு இழந்தார். 2 வயது குழந்தை மோகித், படுகாயம் அடைந்தான்.
குழந்தை மோகித் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று 5:30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை மோகித் உயிரிழந்தான்.
✍️ *தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்திய 75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்*
கவுதாரிமுனை கடற்கரை அருகே உள்ள தொடுவாய் பகுதியில் மறைந்திருந்த போது, டூ வீலரில் சந்தேகப்படும்படி மர்ம நபர் ஒருவர் மூட்டைகளுடன் வந்தார்.
சிறப்பு அதிரடிப்படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போது, அந்த நபர் டூ வீலரை விட்டு அங்கிருந்து தப்பினார். வாகனத்தில் இருந்த மூட்டையில் 38 பொட்டலங்களில், 75 கிலோ கஞ்சா இருந்தது. டூ வீலர் பதிவு எண் அடிப்படையில் போலீசார், சிறப்பு அதிரடி படையினர் விசாரிக்கின்றனர். பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்சம் ரூபாய்.
✍️ *திருவொற்றியூர் அருகே தனியார் பள்ளியில் 2-வது முறை வாயுக்கசிவு*
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*